mandag den 4. april 2011

தீபாவளிக்கு ரிலீசாகிறது நண்பன்


பொதுவாக ஷங்கர் படம் என்றாலே முடிவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகும். ஆனால் இப்போது இவரது இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் “நண்பன்” படம் ஓராண்டிற்கு உள்ளே முடியும் என்றும், இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.இந்தியில் சக்கபோடு போட்ட “3-இடியட்ஸ்” படம் தமிழில் “நண்பன்” என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஷங்கர் எப்பவும் தன்னுடைய படங்களை குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது எடுப்பார். ஆனால் நண்பன் பட சூட்டிங்கோ ஜெட் வேகத்தல் சென்று கொண்டு இருக்கிறது.
கடந்த மாதம் தான் ஊட்டியில் தனது சூட்டிங்கை துவக்கினார். ஆனால் அதற்குள் 2கட்ட சூட்டிங்கை முடித்துவிட்டார். இன்னும் சிலதினங்களில் மூன்றாம் கட்ட சூட்டிங்கை ஆரம்பிக்க இருக்கிறார். அத்துடன் படத்திற்கான இசையமைப்பு வேலையும் வேகமாக நடைபெற்று வருகிறது. நண்பன் படத்திற்காக தற்போது லண்டனில் மியூசிக் கம்போசிங் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஹாரிஸ், இரண்டு பாடல்களை கம்போசிங் பண்ணி முடித்துவிட்டார். விரைவில் மீதி பாடல்களையும் முடிக்க இருக்கிறார். இதனால் படத்தின் ஆடியோவை செம்படம்பர் மாதம் வெளியிட முடிவுசெய்துள்ளனர். அத்துடன் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு இருக்கின்றனர்.

Ingen kommentarer:

Send en kommentar