tirsdag den 31. maj 2011
முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: விஜய்!
தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற உறுதுணையாக இருந்தது போல, தொடர்ந்து நற்பணிகள் பல செய்து அம்மாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார் நடிகர் விஜய்.
காவலன் பட பிரச்சனை தொடர்பாக விஜய்க்கும், தி.மு.க.,விற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அந்த மோதல் விஜய்யையும், அவரது ரசிகர்களையும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வைத்தது. இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அதிமுக., அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இந்நிலையில் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தமது ரசிகர்கள் செயல்பட்டதற்காக, அவர்களை அழைத்து விருந்து வைத்தார் நடிகர் விஜய்.
சென்னையில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில் நேற்று(29.05.11) மாலை நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை திடீரென சந்தித்தார். நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், “நமது இயக்கம் அதி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன். நீங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும், அந்த உணர்வுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜெயலலிதாவின் வெற்றிக்கு முழு மூச்சோடு உழைத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நாமும் ஓர் அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் வெற்றி பெற்ற பல வேட்பாளர்கள் என்னை தொடர்பு கொண்டு, உங்களது கடுமையான உழைப்பை பாராட்டிய போது எனக்கு பெருமையாக இருந்தது. மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என்று கவியரசு கண்ணதாசன் சொன்னது போல, நமது நற்பணி மன்றங்கள் காலப்போக்கில் நற்பணி இயக்கமாக மாறியது. இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது முதல், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மையங்கள் ஏற்படுத்தியது வரை, பல சமூக நலப்பணிகள் செய்து நமது இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது.
இனி மேலும் சமூக நலப்பணியை தொடர்ந்து செய்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தி, ஜெயலலிதாவின் ஆசியோடு உங்களின் எதிர்காலத்தையும் ஒளிமயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விவேகானந்தர் சொன்னது போல வேகத்தோடும், விவேகத்தோடும் பணியாற்றுங்கள். நாளைய உலகம் உங்கள் கையில். இவ்வாறு விஜய் பேசினார்.
பின்னர் நிகழ்ச்சியில் நற்பணி மன்றத் தலைவராக இருந்த சி.ஜெயசீலன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பொறுப்புக்கு புஸ்ஸி ஆனந்த்தும், ஜி.பாஸ்கர் அவர்களும் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்கள் இயக்க நிறுவனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சிறப்புரையாற்றி அனைவருக்கும் நன்றி கூறினார். பின்னர் வந்திருந்த நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு விஜய், பிரியாணி விருந்து கொடுத்தார்.
ஜெயம் ராஜா பிறந்த நாள்-கேக் கொடுத்த விஜய்
இயக்குநர் ஜெயம் எம்.ராஜா தனது பிறந்த நாளை வேலாயுதம் படப்பிடிப்பில் வைத்துக் கொண்டாடினார்.
இயக்குநர் எம்.ராஜா இன்று தனது பிறந்தநாளை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் ‘வேலாயுதம்” படப்பிடிப்பில் கொண்டாடினார். இதையொட்டி, அவருக்கே தெரியாமல் நடிகர் விஜய் 'சேட்டை சாதுவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!” என எழுதபட்ட வாசகங்களுடன் கூடிய கேக்கை வரவழைத்து படப்பிடிப்பின் இடைவேளையில் இயக்குநரை ஆச்சர்யப்படுத்தினார்.
நடிகர் விஜய், கேமராமேன் ப்ரியன் உட்பட படிப்பிடிப்பு குழுவினரின் மத்தியில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார் எம்.ராஜா.
ஏற்கனவே ‘வேலாயுதம்” படபிடிப்பின்போது நடிகை ஹன்சிகா மோத்வானி, கேமராமேன் ப்ரியன், தனக்கு தங்கையாக நடிக்கும் நடிகை சரண்யா மோகன் ஆகியோரின் பிறந்தநாள் விழாவிற்கும் நடிகர் விஜய் தான் கேக் வரவழைத்து பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.
mandag den 16. maj 2011
ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து..விஜய்
நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னார் நடிகர் விஜய்.
காவலன் படத்தை வெளியிட முடியாமல் கருணாநிதி அரசு நெருக்கடி கொடுத்ததால் அதிமுகவுக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்தது விஜய்யின் மக்கள் இயக்கம். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். அதிமுக வெற்றி பெற்றதும், தன்னைப் போலவே தமிழக மக்களும் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்று அறிவித்த விஜய், தேர்தல் முடிவு மிக மிக மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
நேற்று மாலை தனது தந்தையுடன் ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்த விஜய் வெற்றி பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
søndag den 15. maj 2011
விஜய் விஜயகாந்துக்கு நேரில் சென்று வாழ்த்து
தமிழகத் தேர்தலில் பெரும் வெற்றியீட்டியுள்ள தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு நடிகர் விஜய் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலளார் செல்வி. ஜெயலலிதாவை தேர்தல் முடிவுகள் வெளிவந்த மாலையே, தனது தந்தையார் இயக்குனர் சந்திரசேகரனுடன் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் அதிர்ச்சி வெற்றியீட்டி, எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமரவுள்ள தேமுதிக தலைவர் விஜய்காந்தை, நேற்று மாலை நேரில் சந்தித்த விஜய், மலர்க்கொத்துக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்ததாகத் தெரிவிக்இச்சந்திப்பின் போது, இவருடன் இயக்குனர் அமீர், இயக்குனர் சேரன் ஆகியோரும் உடன் சென்று விஜய்காந்துக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டதன் பின்னர், இவர்களோடு விஜய்காந் சிறிது நேரம் கலந்துரையாடியதாகவும் தெரிய வருகிறது.கப்படுகிறது.
torsdag den 5. maj 2011
ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட காவலன் தேர்வு
விஜய் நடித்த காவலன் திரைப்படம், சீனாவின் ஷாங்காய் உலகப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சித்திக் இயக்கத்தில் விஜய் - அசின் நடித்த காவலன் படம் பொங்கலுக்கு ரிலீஸானது. இந்தப் படம் விஜய்யின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்போது சீனவின் முக்கிய நகரமான ஷாங்காயில் நடக்கும் 14வது உலகப் பட விழாவில் பனோரமா பிரிவில் தேர்வு பெற்றுள்ளது.
இந்த விழாவில் உலகம் முழுவதும் 80 நாடுகளில் இருந்து 2500 படங்கள் இதில் கலந்து கொள்கின்றன. இதில் முதன்முறையாக தென்னிந்தியாவிலிருந்து காவலன் படம் மட்டுமே தேர்வு பெற்றுளளது என விஜய்யின் பிஆர்ஓ பிடி செல்வகுமார் கூறினார்.
ஆஸ்கர் விருது பெற்ற 'ரெய்ன் மேன்' பட இயக்குநர் பேரி லெவின்சன் தலைமையில் அமைக்கப்பட்ட இயக்குநர்கள் குழுதான் இந்த விழாவுக்குரிய படங்களைத் தேர்வு செய்தது.
வரும் ஜுன் 11 முதல் 19 வரை விழா நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க விஜய்யை அழைக்கப்பட்டுள்ளார், என இந்த விழாவிற்கு படங்களை தேர்வு செய்து அனுப்பும் ஒருங்கிணைப்பாளர் ரேக்ஸ் தெரிவித்தார் .
tirsdag den 3. maj 2011
ஷங்கரை விஜய்யை புகழ்ந்து வருகிறார்
தனக்கு பழக்கமேயில்லாத வேகத்தில் நண்பன் படத்தை எடுத்து வருகிறார் ஷங்கர். படத்தில் மூன்று ஹீரோக்கள் இருந்தாலும் எந்த இடையூறும் இல்லை, குறிப்பாக விஜய்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே மேக்கப்புடன் படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகிவிடுகிறார் விஜய். இது மொத்தப்பட யூனிட்டையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. மாஸ் ஹீரோ என்ற எந்த பந்தாவும் இல்லை.
விஜய்யின் இந்த டெடிகேஷன் ஷங்கரை வியக்க வைத்திருக்கிறது. ஆச்சரியத்துடன் நெருங்கிய நண்பர்களிடம் விஜய்யை புகழ்ந்து வருகிறார்.
Abonner på:
Opslag (Atom)