torsdag den 5. maj 2011

ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட காவலன் தேர்வு


விஜய் நடித்த காவலன் திரைப்படம், சீனாவின் ஷாங்காய் உலகப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சித்திக் இயக்கத்தில் விஜய் - அசின் நடித்த காவலன் படம் பொங்கலுக்கு ரிலீஸானது. இந்தப் படம் விஜய்யின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்போது சீனவின் முக்கிய நகரமான ஷாங்காயில் நடக்கும் 14வது உலகப் பட விழாவில் பனோரமா பிரிவில் தேர்வு பெற்றுள்ளது.

இந்த விழாவில் உலகம் முழுவதும் 80 நாடுகளில் இருந்து 2500 படங்கள் இதில் கலந்து கொள்கின்றன. இதில் முதன்முறையாக தென்னிந்தியாவிலிருந்து காவலன் படம் மட்டுமே தேர்வு பெற்றுளளது என விஜய்யின் பிஆர்ஓ பிடி செல்வகுமார் கூறினார்.

ஆஸ்கர் விருது பெற்ற 'ரெய்ன் மேன்' பட இயக்குநர் பேரி லெவின்சன் தலைமையில் அமைக்கப்பட்ட இயக்குநர்கள் குழுதான் இந்த விழாவுக்குரிய படங்களைத் தேர்வு செய்தது.

வரும் ஜுன் 11 முதல் 19 வரை விழா நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க விஜய்யை அழைக்கப்பட்டுள்ளார், என இந்த விழாவிற்கு படங்களை தேர்வு செய்து அனுப்பும் ஒருங்கிணைப்பாளர் ரேக்ஸ் தெரிவித்தார் .

Ingen kommentarer:

Send en kommentar