torsdag den 30. juni 2011

விஜய்யின் வியத்தகு மாற்றம் !!


முன்பொரு முறை ஊடக சந்திப்பு ஒன்றில் இயக்குனர் தரணி சொன்ன வார்த்தைகள் இது.
விஜய் சாரிடம் கதை சொல்லப் போகும் போது அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன்.


விழுந்து விழுந்து சிரிக்கிற காட்சிகளில் கூட மிக அமைதியாக புன்னகைப்பார். அதுவே எனக்கு பெரிய திருப்தியாக இருக்கும். அவர் இப்படி சிரித்துவிட்டால், தியேட்டரில் அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று அர்த்தம்.

தரணியின் இந்த வார்த்தைகளை அதே அமைதியோடு கேட்டுக் கொண்டிருந்தார் விஜய்யும். அப்படிப்பட்டவரிடம் இன்று பெரிய மாற்றம் வந்திருப்பதாக சந்தோஷப்படுகிறார்கள் திரையுலகத்தில். தன்னிடம் வந்த மிக முக்கியமான கதைகளை கூட வேண்டாம் என்று திருப்பி அனுப்பியவர் அவர்.

”சிங்கம்” படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் தான் சொன்னார் ஹரி. ”காக்க காக்க” கதையை கூட முதலில் இவரிடம் தான் சொன்னார் கவுதம். ”கஜினி” மட்டும் என்னவாம்? முருகதாஸ் முதலில் வந்ததே விஜய்யிடம் தான். ”அயன்” கதையின் நாயகனாக கே.வி.ஆனந்தின் மனதில் சித்தரிக்கப்பட்டவரும் இவரே தான்.

இப்படியெல்லாம் தேடி வந்த கதைகளையும் இயக்குனர்களையும் ஏதோ சில காரணங்களால் மறுதலித்த விஜய், தற்போது அடியோடு மாறியிருக்கிறார். கடந்த சில வாரங்களாக மேற்படி இயக்குனர்கள் அத்தனை பேரையும் தனித்தனியே தன் வீட்டிற்கு அழைத்தாராம். மனம் விட்டு பேசியவர், தனது அன்பை பலப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விருந்தும் அளித்தாராம்.

விஜய்யின் இந்த வியத்தகு மாற்றம், இன்டஸ்ட்ரி முழுக்க கசிந்து எல்லாரையும் இன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

onsdag den 22. juni 2011

உற்சாகத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய விஜய்


முன் எப்பொழுதும் இல்லாத உற்சாகத்துடன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகர் விஜய்.
இந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை ரத்த தானம், கண் தானம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும், எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் இன்று பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கிறார் விஜய். இந்த மருத்துவமனையில் தான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 500 குழந்தைகளுக்கு அவர் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்படுவதாக அவரது பிஆர்ஓ செல்வகுமார் தெரிவித்துள்ளார். இது தவிர, சாலி கிராமத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதனை விஜய் தொடங்கி வைத்தார்.

ஷோபா திருமண மண்டபத்தில் ஏழைகளுக்கு இலவச புடவை, வேட்டிகளையும், மாணவ - மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் விஜய் வழங்கினார்.

சின்மயா நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று மதிய உணவாக பிரியாணி வழங்குகிறார்.

tirsdag den 21. juni 2011

நடிகர் விஜய் வேண்டுகோள்


தனது பிறந்தநாளையொட்டி கண்தானம் செய்யும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்க்கு நாளை (புதன்கிழமை) பிறந்தநாள். இந்த பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோள்:

"எனது பிறந்தநாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் சென்னையில், என் முன்னிலையில் கண்தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண்தானம் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்.

இதேபோல் ரத்ததானம் செய்வதுடன், ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏழை மாணவர்-மாணவிகளுக்கு உதவுதல், ஏழைப்பெண்களுக்கு உதவுதல் போன்ற சமூக நலப்பணிகளை செய்து மக்கள் இயக்கத்தை வலுவடைய செய்ய வேண்டும்.''

-இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியிருக்கிறார்.

lørdag den 18. juni 2011

சீமான் அதிரடி மாற்றத்தில் ஆரம்பிக்கும் விஜயின் பகலவன்


எத்தனை தடைகள் வந்தாலும் 'நண்பன்' படத்தை முடித்துக் கொடுத்த கையோடு 'பகலவன்' படத்தை தொடங்குவதில் உறுதியாக இருக்கின்றனர்.
சீமான், விஜய், தாணு டீம். மருத்துவர் புகழேந்தியாக, எம்.பி.பி.எஸ். படித்து விட்டு கிராமத்துக்குச் சென்று எழை மக்களுக்கு மருத்துவம் பார்க்கும் விஜய் காலாவதியான மருந்து மாபியாவுடம் மோதுவதுதான் கதையாக இருந்ததாம் முதலில்.

ஆனால் தற்போது அதிலும் ஒரு அதிரடி மாற்றத்தை சீமான் கொண்டு வந்து விட்டதால் 'பகலவன்' கதையில் பெரிய மாற்றம் என்கிறார்கள் சீமானின் உதவியாளர்கள். அதாவது அனைத்து துறைகளையும் கண்மூடித்தனமாக அரசு தனியார் மயமாக்குவதை கடுமையாக எதிர்த்து போராடும் ஒரு துடிப்புமிக்க இளைஞனின் கதைதான் 'பகலவன்' என்கிறார்கள்.

படத்தின் புதிய திரைக்கதையின்படி டாக்டராக இருக்கும் விஜய்க்கும் ஒரு முரட்டு போலீஸ் அதிகாரிக்கும் இடையில் பிரச்சினை வெடிக்கிறது. அப்போது போலீஸ் அதிகாரி 'நீ ஒரு டாக்டர். காய்ச்சல்ன்னு வர்றவனுக்கு காலனா மாத்திரை கொடுக்குறவன் நீ உன்னால் என்னை என்ன செய்ய முடியும்' என்று கேட்கிறாராம்.

இதில் கோபம்கொள்ளும் விஜய், ஐ.பி.எஸ் படித்து போலீஸ் அதிகாரியாக உயர்ந்து அந்த வில்லன் அதிகாரியுடன் மோதி காலாவதி மருந்து கும்பலை காலி பண்ணுவதுதான் விஜய்யின் 'பகலவன்' என்கிறார்கள். ஏற்கெனவே 'போக்கிரி' படத்தில் விஜய் போலீஸ் சீருடையில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

torsdag den 16. juni 2011

விஜய்யின் ‌வேலாயுதம் ஓடியோ வெளியீடு


தொடர்ந்து தள்ளிபோய் கொண்டே இருந்த விஜய்யின் "வேலாயுதம்" படத்தின் ஓடியோ வெளியீடு அடுத்த மாதம் ஜூலை 5 ம் திகதி வெளியீடு செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
"காவலன்" படத்திற்கு பிறகு விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் "வேலாயுதம்".


அதிரடி ஆக்ஷன் கலந்த மசாலா படமாக உருவாகி வரும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா, ஹன்சிகா‌ மொத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். "ஜெயம்" ராஜா இயக்கும் இப்படத்தை, ஓஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.

படத்தின் சூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடியோ வெளியீடு தொடர்ந்து தள்ளிக்கொண்டே போய் வந்த நிலையில், அடுத்த மாதம் ஜூலை 5 ம் திகதி திட்டவட்டமாக வெளியீடு செய்ய இருக்கின்றனர்.

மெலோடி, குத்துப்பாட்டு என்று ‌விஜய் ஆண்டனியின் இசையில் மொத்தம் 7 பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக விஜய்க்கு ஓபனிங் சாங்கை மட்டும் கிட்டத்தட்ட ரூ.2 கோடி செலவில் படமாக்கியுள்ளனர்.

VIJAY & SALMAN




mandag den 13. juni 2011

காவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்... விஜய் வியப்பு!


ஷாங்காய் நகரில் திரையிடப்பட்ட காவலன் படத்தைப் பார்த்து சீன ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது எனக்கு வியப்பைத் தந்தது என நடிகர் விஜய் கூறினார்.

ஷாங்காய் திரைப்பட விழா சீனாவில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் விஜய் நடித்த காவலன் (11-ந்தேதி) மாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ஆங்கில - சீன மொழி சப்-டைட்டிலுடன் காவலன் திரையிடப்பட்டது.

சீன மொழியைச் சார்ந்த அனைவரும் ஆர்வத்துடன் படம் பார்த்தனர். ஒவ்வொரு காட்சியையும் ரசித்ததுடன் காமெடி காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது என்று கூறினார் விஜய்.

படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கினர். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடிந்ததும் அவர்கள் மத்தியில் விஜய் பேசினார்.

அவர் கூறுகையில், "வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை. ஷாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது முற்றிலும் எனக்கு புது அனுபவம்.

நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது உதாரணம். படம் பார்த்து முடித்தவுடன் என் கேரக்டரான பூமி என்ற பெயரைச் சொல்லி அவர்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்நாளில் இது மறக்க முடியாத அனுபவம்.

ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். (பலத்த கைதட்டல்) நான் படிக்கும் போது அவருடைய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்," என்றார்.

விஜய்யின் பேச்சு அனைவரையும் கவரவே, எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக விஜய் நினைவு பரிசை வழங்கினார்.

lørdag den 11. juni 2011

சீனா புறப்பட்டார் விஜய்


ஷாங்காய் உலகப் படவிழாவில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு புறப்பட்டார் நடிகர் விஜய்.

சீனாவின் ஷாங்காய் நகரில் புகழ்பெற்ற உலகப் பட விழா நடக்கிறது. 80 நாடுகளிலிருந்து 2500 படங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்த விழாவில் திரையிட விஜய்யின் காவலன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம் காவலன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது பெற்ற 'ரெய்ன் மேன்' பட இயக்குநர் பேரி லெவின்சன் தலைமையில் அமைக்கப்பட்ட இயக்குநர்கள் குழுதான் இந்த விழாவுக்குரிய படங்களைத் தேர்வு செய்தது.

வரும் ஜுன் 11 முதல் 19 வரை விழா நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க விஜய்யை அழைக்கப்பட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்க நேற்று சீனாவுக்குப் புறப்பட்டார் விஜய். இதுகுறித்து அவர் கூறுகையில், "உலகின் பல்வேறு நாட்டு கலைஞர்களும் திரைப்படங்களும் பங்கேற்கும் இந்த விழாவில் நானும் கலந்து கொள்வது பெருமையாக உள்ளது", என்றார்.

torsdag den 9. juni 2011

பகலவன்...விஜய்க்குக் கதை சொல்லத் தயாராகும் சீமான்!


கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக மைக்கை கையில் எடுக்கிறார் சீமான்.

விஜய் நடிக்க 'பகலவன்' படத்தை கலைப்புலி எஸ் தாணுவுக்காக தயாரிக்கிறார்.

இந்தப் படத்துக்கான எழுத்துப் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்ட சீமான், அடுத்து விஜய்க்கு கதை சொல்ல தயாராகிறார்.

பகலவன் கதை என்ன? "அரசின் அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்கி வருகிறார்கள். இது தொடர்ந்தால் நாடே முதலாளிகளின் கையில் அடைப்பட்டு விடும். இதனை எதிர்த்து போராடும் ஒரு வீரமான இளைஞனைப் பற்றிய படம் தான் 'பகலவன்'. கண்டிப்பாக விஜய்க்கு இந்த திரைப்படம் பெரும் மாற்றத்தை தரும், அவர் விரும்பும் துறைகளில்.

விஜய்க்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள். நாயகிகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தம்பி விஜய்க்கு இன்னும் ஒரு வாரத்தில் முழு கதை மற்றும் திரைக்கதையை கூறி விடுவேன்.

tirsdag den 7. juni 2011

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: விஜய் வேண்டுகோள்


தனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என்றும் அதற்குப் பதில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுமாறும் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஜூன் 22-ம் தேதி வரும் எனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் விமர்சையாக கொண்டாட வேண்டாம். அதற்குப் பதில் ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து இந்த ஜூன் மாதம முழுவதும் அவரது பிறந்த நாளையொட்டி நலத் திட்டங்களைச் செய்ய முடிவு செய்துள்ளனர் ரசிகர்கல்.

அதன்படி, வட சென்னையில் இன்று ஒரே நாளில் 10 விஜய் மன்றங்கள் 150 மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களையும், 75 ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகளையும் வழங்கினர். கார்னேசன் நகரில் ஏழைகளுக்கு உடைகள் வழங்கினர். கேசிஎஸ் கல்லூரி அருகே உள்ள 100 மாணவ மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள், ஸ்கூல் பைகள் வழங்கினர்.

மேலும் அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவ மாணவிகளுக்கு கம்ப்யூட்டர்களை வழங்கினர். இந்த விழாவில் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் பங்கேற்றார்.

பின்னர் அவர் பேசுகையில், "விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வலகையில் பெரிய உதவிகள் அறிவிக்கப்படும்," என்றார்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் மன்ற மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், செயலாளர் ரவிராஜா, பிஆர்ஓ பிடி செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

onsdag den 1. juni 2011

அஜீத்தின் மங்காத்தாவில் விஜய்…?


கோலிவுட்டின் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு விஜய், அஜீத் பற்றிய செய்தி தான். அஜீத் நடிப்பில் உருவாகி வரும் அவரது 50வது படமான மங்காத்தாவில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக எல்லா தொழிலும் போட்டி இருக்கிறது, அதுபோல சினிமாவிலும் போட்டி உண்டு. அதில் அஜீத்துக்கும், விஜய்க்கும் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் இவர்களது படத்தில் அஜீத்தை தாக்கி விஜய் பஞ்ச் டயலாக் பேசுவது போன்றும், விஜய்யை தாக்கி அஜீத் பஞ்ச் டயலாக் பேசுவதும் தொடர்கதையாக இருந்தது. இது இவர்களது ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்தது. இருவரது ரசிகர்களும் எப்போதும் முறைத்து கொண்டுதான் இருப்பார். ஆனால் நிஜத்தில் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க மாட்டார்களா…? என இவர்களது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. இப்போது அந்த ஏக்கம் பூர்த்தியாகி இருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 50வது படமான மங்காத்தா படத்தில், படத்தின் நாயகி த்ரிஷா தவிர அர்ஜூன், லட்சுமிராய், அஞ்சலி, வைபவ், பிரேம்ஜிஅமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில் மங்காத்தாவில் ஒரு காட்சியில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் மற்ற நடிகர்கள் படங்களில் கெஸ்ட்ரோலில் வந்துபோய் உள்ளார். ஆனால் அதெல்லாம் பெரிய விஷயமல்ல. அஜீத் படத்தில், விஜய் கெஸ்ட்ரோலில் நடித்திருப்பதாக கூறுவது தான் பெரிய விஷயம். இந்தசெய்தி குறித்த உறுதியான தகவல் இல்லை. ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருப்பின், நிச்சயமாக இருவரது ரசிகர்களுக்கும் இது கொண்டாட்டமான செய்தி தான்.