onsdag den 22. juni 2011

உற்சாகத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய விஜய்


முன் எப்பொழுதும் இல்லாத உற்சாகத்துடன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகர் விஜய்.
இந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை ரத்த தானம், கண் தானம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும், எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் இன்று பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கிறார் விஜய். இந்த மருத்துவமனையில் தான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 500 குழந்தைகளுக்கு அவர் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்படுவதாக அவரது பிஆர்ஓ செல்வகுமார் தெரிவித்துள்ளார். இது தவிர, சாலி கிராமத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதனை விஜய் தொடங்கி வைத்தார்.

ஷோபா திருமண மண்டபத்தில் ஏழைகளுக்கு இலவச புடவை, வேட்டிகளையும், மாணவ - மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் விஜய் வழங்கினார்.

சின்மயா நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று மதிய உணவாக பிரியாணி வழங்குகிறார்.

Ingen kommentarer:

Send en kommentar