lørdag den 11. juni 2011

சீனா புறப்பட்டார் விஜய்


ஷாங்காய் உலகப் படவிழாவில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு புறப்பட்டார் நடிகர் விஜய்.

சீனாவின் ஷாங்காய் நகரில் புகழ்பெற்ற உலகப் பட விழா நடக்கிறது. 80 நாடுகளிலிருந்து 2500 படங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்த விழாவில் திரையிட விஜய்யின் காவலன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம் காவலன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது பெற்ற 'ரெய்ன் மேன்' பட இயக்குநர் பேரி லெவின்சன் தலைமையில் அமைக்கப்பட்ட இயக்குநர்கள் குழுதான் இந்த விழாவுக்குரிய படங்களைத் தேர்வு செய்தது.

வரும் ஜுன் 11 முதல் 19 வரை விழா நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க விஜய்யை அழைக்கப்பட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்க நேற்று சீனாவுக்குப் புறப்பட்டார் விஜய். இதுகுறித்து அவர் கூறுகையில், "உலகின் பல்வேறு நாட்டு கலைஞர்களும் திரைப்படங்களும் பங்கேற்கும் இந்த விழாவில் நானும் கலந்து கொள்வது பெருமையாக உள்ளது", என்றார்.

Ingen kommentarer:

Send en kommentar