søndag den 29. januar 2012

துப்பாக்கி திரைப்படத்தை வாங்கிய ஜெமினி நிறுவனம்


விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் துப்பாக்கி திரைப்படத்தை ஜெமினி நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த வருடத்தின் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் உருவாகி வரும் திரைப்படம் துப்பாக்கி.ஏ.ஆர்.முருகாதாஸ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாகவும், காஜல் அகர்வால் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தின் வெற்றியையடுத்து நடிகர் விஜய் தன் உயர் நிலையை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில் தற்போது துப்பாக்கி திரைப்படத்தை ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் வாங்கியுள்ளது.

இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

søndag den 22. januar 2012

இலியானா மூக்கு இடிக்கவில்லை... விஜய் விளக்கம்!


காட்சிக்குத் தேவைப்பட்டதால்தான் இலியானாவுக்கு நண்பன் படத்தில் முத்தமிட்டேன். அதேசமயம், அவருக்கு நான் நேருக்கு நேராக முத்தமிடவில்லை. இதனால் மூக்கு இடிக்கவில்லை என்று முத்தமிட்டது தொடர்பாக வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளார் விஜய்.

நண்பன் படம் படு வேகமாகப் போய்க் கொண்டிருப்பது நண்பன் படக் குழுவை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு போயுள்ளது. இப்படிப்பட்ட படங்களில் விஜய் தொடர்ந்து நடித்தால் எப்படியிருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கூறுவதைப் பார்க்க முடிகிறது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அத்தனைத் தரப்பினரும் நண்பனைப் பார்க்க அலை மோதுவதை தியேட்டர்களில் காண முடிகிறது. நண்பன் படம் வசூலில் அள்ளிக் கொண்டிருப்பதை தமிழ்த் திரையுலகமும் கூட சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜய். அப்போது அவர் கூறுகையில்,

நண்பன் படம் நல்லா போகுது. வசூலில் என் முந்தைய படங்கள் சாதனையை முறியடித்துள்ளதாகவும் தகவல் வருது. வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் இருந்தது. இந்தியில் 3 இடியட்ஸ் பார்த்த போது ரொம்ப பிடித்தது. அதனால் அதன் ரீமேக்கில் நடித்தேன். இது மாதிரி கேரக்டர்களில் நடிக்க கதை, இயக்குனர், தயாரிப்பாளர் எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி அமைய வேண்டும்.

நண்பன் படத்தில் அது அமைந்தது. இதில் ஆக்ஷன், பன்ச் வசனம் இல்லை. பத்து பேரை அடித்து சண்டை போடுவது ஒரு வகை ஹீரோயிசமாக இருந்தாலும் நண்பன் பட கேரக்டர் வேறு விதமான ஹீரோயிசம்.

என்னை திரையில் வித்தியாசமாக பார்க்க ஆசைப்பட்டேன். அது நண்பன் படத்தில் நிறைவேறியது. என் படங்களில் பஞ்ச் வசனங்களை திணிக்க விரும்ப மாட்டேன். சீன்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே பேசுவேன்.

நண்பன் படத்தில் கதைக்கு தேவையாக இருந்ததால் இலியானாவுடன் முத்த காட்சியில் நடித்தேன். அதேசமயம், நேருக்கு நேராக முத்தம் கொடுக்கவில்லை. மாறாக சாய்த்துக் கொடுத்ததால், மூக்குடன் மூக்கு இடிக்கவில்லை.

ஸ்ரீகாந்த், ஜீவா பேன்ட் கழற்றும் சீன்கள் தவறாக தெரியவில்லை. கல்லூரி ராக்கிங்குகளில் அவை நடப்பவை தான். படப்பிடிப்பில் ஸ்ரீகாந்த்தும் ஜீவாவும் எனக்கு நெருக்கமான நண்பர்களாகி விட்டனர்.

தற்கால கல்வி முறையின் தவறுகள் படத்தில் சுட்டிக் காட்டிப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு எந்த துறையிலும் ஆர்வம் இருக்கிறதோ அதில் அனுப்ப வேண்டும். எனது அப்பா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சினிமாவுக்கு வந்து விட்டேன். எனது மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறது.

அடுத்து துப்பாக்கி படத்தில் நடிக்கிறேன். இப்படம் வேறு பரிமானத்தில் இருக்கும். நண்பன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் விஜய்.

torsdag den 19. januar 2012

விஜய் வேடத்தை மாற்றிய இயக்குனர் முருகதாஸ்


இளையதளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது.

கொலிவுட்டில் இளையதளபதி விஜய், முருகதாஸ், ஹாரீஸ் ஜெயராஜ் கூட்டணியில் துப்பாக்கி படம் வேகமாக உருவாகி வருகிறது.துப்பாக்கியில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு துப்பாக்கியை தயாரிக்கிறார்.

இந்தப்படத்துக்காக நாயகன் விஜய்யின் வேடத்தை இயக்குனர் முருகதாஸ் மாற்றியுள்ளார்.

இந்தப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை வானகரம் சந்தையில் சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளார்கள்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்து வருகிறது. தன்னுடைய படத்திற்கு நீண்ட நாட்கள் ஆகக்கூடாது என்பதற்காக, பணிகளை வேகமாக விஜய் முடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

søndag den 15. januar 2012

பெங்களூரில் வெற்றி பெற்ற நண்பன்


விஜய்க்கு எல்லா இடங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து வருகிறார். வேலாயுதம் கேரளாவில் வசூலில் கோடிகளை அள்ளியது . இப்பொழுது நண்பன் கர்நாடகாவில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. கர்நாடகாவில் விஜயின் காவலன் நல்ல வரவேற்பை பெற்றது இப்பொழுது நண்பன் படமும் அங்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கர்நாடகாவில் அதிகளவு திரையரங்குகளில் வெளியாகியது.
இப்படம் வெளியாகிய இடம் எல்லாம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது என அறிவிக்கப்படுள்ளது. விஜய் இலியான ஜீவா சிறிகாந்த் சத்தியராஜ் மற்றும் பலர் நடிக்க சங்கர் இயக்கத்தில் ஜெமினி பிலிம்ஸ் வெளியிட்ட இப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.

torsdag den 12. januar 2012

நண்பன் ஐந்து நாட்கள் ஹவுஸ்ஃபுல்


நண்பன் படத்தின் ‌ரிசர்வேஷன் எதிர்பார்த்தது போலவே ஹிட்டடித்திருக்கிறது.

இயக்கம் ஷங்கர், நடிப்பு விஜய்... எதிர்பார்ப்புக்கு கேட்க வேண்டுமா? படத்தின் ‌ரிசர்வேஷன் தொடங்கிய அன்றே ட்ரெயின் டிக்கெட் அளவுக்கு அவசரமாக ஐந்து நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. சில மல்டிபிளிக்ஸ்கள் இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்பெஷல் ஷோக்கள் அறிவித்துள்ளன. இவையும் ஹவுஸ்ஃபுல் என்பதுதான் விசேஷம்.

tirsdag den 10. januar 2012

நண்பன் நுழைவுச்சீட்டு விற்பனை அபாரம்


தமிழ் திரையுலகில் நண்பன் திரைப்படத்திற்கான நுழைவுச் சீட்டு முன்பதிவு ஆரம்பமான சிறிது நேரத்திலேயே பெரிய திரையரங்குகள் அனைத்திலும் 2 நாட்களில் முடிந்துள்ளது.

தமிழ் திரையுலகில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா நடிப்பில் நண்பன் திரைப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.நண்பனுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஜெமினி நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

நண்பன் திரைப்படம் கடந்த 2011ம் ஆண்டே வெளியீட்டிற்கு தயாராக இருந்தாலும் விஜய் நடிப்பில் வேலாயுதம் படம் வெளியானதால் 2012 பொங்கல் அன்று வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வருகிற 12ம் திகதியே படத்தினை வெளியீட படக்குழுவினர் தீர்மானித்து இருக்கிறார்கள்.

நண்பன் படத்திற்கு நுழைவுச்சீட்டு முன்பதிவு ஆரம்பமான சிறிது நேரத்திலேயே பெரிய திரையரங்குகள் அனைத்திலும் முதல் 2 நாட்களில் முடிந்துள்ளது.

ரசிகர்களின் இந்த வரவேற்பால் பெரும் சந்தோஷத்தில் படக்குழுவினர் இருக்கிறார்கள்.

விஜய்க்காக உருவாகும் தளபதி ANTHEM


தமிழ் திரையுலகில் இளைய தளபதி விஜயக்காக அவரது ரசிகர்கள் THALAPATHY ANTHEM என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள்.

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்கள் தற்போது தங்களுடைய பாடல்கள் மூலம் பிரபலமடைந்து வருகின்றார்கள்.
நாயகன் தனுஷ் WHY THIS KOLAVERI பாடல் மூலம் பிரபலமாகி விட்டார். சிம்பு A LOVE ANTHEM FOR WORLD PEACE என 96 மொழிகளில் காதல் என்ற வார்த்தைகளை கோர்த்து ஒரு பாடலாக தொகுத்து வெளியிட இருக்கிறார்.

இதையடுத்து விஜய் ரசிகர்கள், விஜய்க்காக THALAPATHY ANTHEM என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள்.

எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் பேருந்து காட்சிகளில் கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

டிவிட்டர் இணையத்தில் இது குறித்து விஜய் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், வருகிற 20ம் திகதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.

mandag den 9. januar 2012

வேட்டை' பாராட்டிய 'நண்பன்


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் நண்பன், ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். ஜெமினி நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது.

நண்பன் படம் 2011ம் ஆண்டே வெளியீட்டிற்கு தயாராக இருந்தாலும் விஜய் நடிப்பில் வேலாயுதம் படம் வெளியானதால் 2012ல் பொங்கல் அன்று வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது.

மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடிப்பில் லிங்குசாமி இயக்கி இருக்கும் படம் வேட்டை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, யு.டிவி நிறுவனம் இப்படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறது. இப்படமும் 2011ம் ஆண்டே தயாரானாலும் பாடல் காட்சிகள் பாக்கி இருந்ததால் 2012ல் பொங்கலுக்கு வெளியீடு என்று தீர்மானிக்கப்பட்டது.

நண்பன், வேட்டை மட்டுமே பொங்கல் விடுமுறைக்கு போட்டியிடுகிறது. தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் இரண்டு படங்களுக்குமே அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

வேட்டை படத்தின் இசையை வெளியிட்டது நண்பன் படத்தினை இயக்கிய ஷங்கர். அப்போது பேசிய ஷங்கர் " லிங்குசாமி இயக்கிய படங்கள் எப்போது மாஸ் + கிளாஸ் இணைந்து இருக்கும். அது தான் அவரது படத்தின் சிறப்பு. ' வேட்டை ' படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது 'ரன்', 'பையா' இணைந்து இருக்கும் " என்று வாழ்த்தினார்.

இயக்குனர் லிங்குசாமி பேசும் போது " ' வேட்டை' படத்துடன் இணைந்து ஷங்கர் சாரின் ' நண்பன் ' படமும் வருகிறது. ' வேட்டை ' படத்தினை விட வசூலிலும் சரி, ஓடும் நாட்களிலும் சரி 'நண்பன்' முதலாவதாக இருக்கும். " என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாது புதுவருட பிறப்பு அன்று ஷங்கர் லிங்குசாமிக்கு போன் செய்து வேட்டை படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இரண்டு பேருமே தங்களது படங்கள் வசூலில் முதலாவதாக இருக்கும் என்று கூறி ஒன்றிணைந்து இருக்கிறார்கள்.

tirsdag den 3. januar 2012

நண்பனுக்கு யு


நண்பன் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்தியில் வெளியான 3இடியட்ஸ் படத்தை நண்பன் என்ற பெய‌ரில் ஷங்கர் விஜய், ‌ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் இயக்கியிருக்கிறார். தெலுங்கில் இந்தப் படம் 3 ராஸ்கல்ஸ் என்ற பெய‌ரில் வெளியாகிறது.

நண்பன் வரும் 12ஆம் தேதி பொங்கலுக்கு முன்பாகவே வெளியிடுகிறார்கள். நேற்று முன்தினம் இப்படம் சென்சார் உறுப்பினர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்