søndag den 22. januar 2012
இலியானா மூக்கு இடிக்கவில்லை... விஜய் விளக்கம்!
காட்சிக்குத் தேவைப்பட்டதால்தான் இலியானாவுக்கு நண்பன் படத்தில் முத்தமிட்டேன். அதேசமயம், அவருக்கு நான் நேருக்கு நேராக முத்தமிடவில்லை. இதனால் மூக்கு இடிக்கவில்லை என்று முத்தமிட்டது தொடர்பாக வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளார் விஜய்.
நண்பன் படம் படு வேகமாகப் போய்க் கொண்டிருப்பது நண்பன் படக் குழுவை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு போயுள்ளது. இப்படிப்பட்ட படங்களில் விஜய் தொடர்ந்து நடித்தால் எப்படியிருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கூறுவதைப் பார்க்க முடிகிறது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அத்தனைத் தரப்பினரும் நண்பனைப் பார்க்க அலை மோதுவதை தியேட்டர்களில் காண முடிகிறது. நண்பன் படம் வசூலில் அள்ளிக் கொண்டிருப்பதை தமிழ்த் திரையுலகமும் கூட சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜய். அப்போது அவர் கூறுகையில்,
நண்பன் படம் நல்லா போகுது. வசூலில் என் முந்தைய படங்கள் சாதனையை முறியடித்துள்ளதாகவும் தகவல் வருது. வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் இருந்தது. இந்தியில் 3 இடியட்ஸ் பார்த்த போது ரொம்ப பிடித்தது. அதனால் அதன் ரீமேக்கில் நடித்தேன். இது மாதிரி கேரக்டர்களில் நடிக்க கதை, இயக்குனர், தயாரிப்பாளர் எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி அமைய வேண்டும்.
நண்பன் படத்தில் அது அமைந்தது. இதில் ஆக்ஷன், பன்ச் வசனம் இல்லை. பத்து பேரை அடித்து சண்டை போடுவது ஒரு வகை ஹீரோயிசமாக இருந்தாலும் நண்பன் பட கேரக்டர் வேறு விதமான ஹீரோயிசம்.
என்னை திரையில் வித்தியாசமாக பார்க்க ஆசைப்பட்டேன். அது நண்பன் படத்தில் நிறைவேறியது. என் படங்களில் பஞ்ச் வசனங்களை திணிக்க விரும்ப மாட்டேன். சீன்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே பேசுவேன்.
நண்பன் படத்தில் கதைக்கு தேவையாக இருந்ததால் இலியானாவுடன் முத்த காட்சியில் நடித்தேன். அதேசமயம், நேருக்கு நேராக முத்தம் கொடுக்கவில்லை. மாறாக சாய்த்துக் கொடுத்ததால், மூக்குடன் மூக்கு இடிக்கவில்லை.
ஸ்ரீகாந்த், ஜீவா பேன்ட் கழற்றும் சீன்கள் தவறாக தெரியவில்லை. கல்லூரி ராக்கிங்குகளில் அவை நடப்பவை தான். படப்பிடிப்பில் ஸ்ரீகாந்த்தும் ஜீவாவும் எனக்கு நெருக்கமான நண்பர்களாகி விட்டனர்.
தற்கால கல்வி முறையின் தவறுகள் படத்தில் சுட்டிக் காட்டிப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு எந்த துறையிலும் ஆர்வம் இருக்கிறதோ அதில் அனுப்ப வேண்டும். எனது அப்பா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சினிமாவுக்கு வந்து விட்டேன். எனது மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறது.
அடுத்து துப்பாக்கி படத்தில் நடிக்கிறேன். இப்படம் வேறு பரிமானத்தில் இருக்கும். நண்பன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் விஜய்.
Abonner på:
Kommentarer til indlægget (Atom)
Ingen kommentarer:
Send en kommentar