onsdag den 8. april 2009

40 லட்ச ரூபாய் செட்டில் வேட்டைக்காரன்



வேட்டைக்காரன் விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம். ஏற்கனவே வெளியான குருவி, வில்லு இரண்டும் சுமார் ரகம் என்றாகிவிட, வேட்டைக்காரன் படத்தை விஜய்யே மிகவும் எதிர்பார்க்கிறார்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பாடல் காட்சிக்கும், சண்டைக் காட்சிக்கும் சுமார் 40 லட்ச ரூபாய் செட் போடப்பட்டிருக்கிறது. மொத்தம் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். மேலும், பாடல் காட்சிக்கும், சண்டைக் காட்சிக்கும் ஏராளமான ஜுனியர் நடிகர்கள் தேவைப்படுவதால் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து வைத்துள்ளனர். அதேபோல், சண்டைக் காட்சியில் இதுவரை இல்லாத பல புது யுக்திகளை பயன்படுத்தப் போகிறார்களாம். அது என்ன என்று கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர்.

Ingen kommentarer:

Send en kommentar