வேட்டைக்காரன் விஜய்யின் நாற்பத்தியொன்பதாவது படம். அடுத்தப் படம் ஐம்பதாவது. யார் ஐம்பதாவது படத்தை இயக்கப் போவது என்பது இன்றுவரை சஸ்பென்ஸ். விஜய்யின் சல்லடை தேர்வில் இரண்டு பேர் எஞ்சியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் தகவல்.
விஜய்க்கு ப்ரெண்ட்ஸ் படத்தின் மூலம் திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தவர் மலையாள இயக்குனர் சித்திக். இவரின் காமெடி கலந்த ஸ்கரிப்ட் மீது விஜய்க்கு எப்போதும் தனி மரியாதை. மலையாளத்தில் பாடிகாட் படத்தை இயக்கி வருகிறார் சித்திக். இந்த கதையை தமிழில் விஜய்யை வைத்து இயக்குவது சித்திக்கின் திட்டம். பாடிகாட்டின் கதையை அவர் விஜய்யிடம் கூறியிருக்கிறார்.
மலையாளத்தில் படம் வெற்றி பெற்றால் அதன் ரிமேக்கில் விஜய் நடிப்பார் என்கிறார்கள் உறுதியாக.
அதே நேரம் இயக்குனர் ராஜாவும் விஜய்யிடம் கதை கூறியிருக்கிறார். விஜய்க்கு அவர் சொன்ன கதை பிடித்திருக்கிறது. வழக்கம்போல இதுவும் தெலுங்கு ரீமேக். பல வருடங்கள் முன் நாகார்ஜுன் நடிப்பில் திருப்பதிசாமி இயக்கிய ஆசாத். ஐம்பதாவது படம் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் ஆசாத் ரிமேக்கில் விஜய் நடிக்கலாம் என்கிறார்கள்.
ஐம்பதாவது படத்துக்கு விஜய் தேர்வு செய்திருக்கும் இரண்டு கதைகளுமே பிற மொழியில் வெளிவந்தவை. ஒரிஜினல் கதை மீது விஜய்க்கு நம்பிக்கையில்லாமல் போனது அவரது குற்றமா? கதாசிரியர்களின் திறமையின்மையா?
Ingen kommentarer:
Send en kommentar