fredag den 3. april 2009

விஜய்க்கு இரண்டு ஜோடி



பாபு சிவன் இயக்கத்தில் வேட்டைக்காரனில் நடித்து வருகிறார் விஜய். முந்தைய இரு படங்கள் ச‌‌ரியாகப் போகாததால் தொடக்க நாள் போஸ்டர்கூட அடிக்காமல் படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார் இளைய தளபதி.
முதல்கட்டமாக ராஜமுந்‌‌தி‌ரியில் விஜய்யின் ஓபனிங் பாடல் படமாக்கப்பட்டது. இதில் விஜய்யுடன் அவரது மகன் சஞ்ச‌ய்யும் ஒரு வ‌ரிக்கு ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது. அருந்ததீ புகழ் அனுஷ்கா விஜய்யின் ஜோடி. இவர் தவிர இன்னொரு ஜோடியும் விஜய்க்கு இருக்கிறாராம். இரண்டாவது ஹீரோயினான அந்த வேடத்தில் நடிக்கப் போகிறவர் யார்? இரண்டாம் வ‌ரிசை நாயகிகள் அந்த வேடத்துக்காக தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், பிரகாசமான வாய்ப்பு மாடல்ஷாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. கே.டி. குஞ்சுமோனின் காதலுக்கு மரணமில்லை படத்தில் மீராநந்தனுடன் இன்னொரு ஹீரோயினாக அறிமுகமானவர்தான் இந்த மாடல்ஷா. முதல் படம் வெளிவரும் முன்பே விஜய் வரைக்கும் இவரது புகழ் எட்டியிருக்கிறது. வேட்டைக்காரனில் இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பு இவருக்கே என்கிறார்கள். மாடல்ஷாவின் அதிர்ஷ்டம் எப்படி என்பது இன்னும் ஓ‌ரிரு நாளில் தெ‌ரிந்துவிடும்.

Ingen kommentarer:

Send en kommentar