fredag den 3. september 2010
கோல்கொண்டாவில் வேலாயுதம்
இளைய தளபதி விஜய் நடிக்கும் வேலாயுதம் படப்பிடிப்புக் குழுவினர் ஆந்திர மாநிலம் கோல்கொண்டாவுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.அங்கு வைத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறதாம்.
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் பிரமாண்ட பொருட் செலவில் இயக்கும் படம் வேலாயுதம். விஜய் நாயகனாக நடிக்க அவருக்கு இரட்டை ஜோடிகளாக ஜெனிலியா மற்றும் ஹன்சிகா நடிக்கின்றனர்.
வழக்கமாக விஜய்யுடன் இணையும் வடிவேலு இப்படத்தில் இல்லை. மாறாக சந்தானம், பாண்டியராஜன், சத்யன் என மும்முனைக் காமெடித் தாக்குதலுடன் வேலாயுதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஜெயம் ராஜா.
முதல் கட்டப் படப்பிடிப்பை சென்னையில் வைத்த ராஜா தற்போது ஆந்திர மாநிலம் கோல்கொண்டாவில் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம்.
விஜய்யும், வில்லன் கோஷ்டியும் மோதும் அனல் பறக்கும் சண்டைக் காட்சியை கோல்கொண்டாவில் சுடச் சுட படமாக்கி வருகிறார்கள்.
Abonner på:
Kommentarer til indlægget (Atom)
Ingen kommentarer:
Send en kommentar