<விஜய் நடித்துள்ள காவலன் படம் டிசம்பரில் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.
விஜய் நடித்து கடைசியாக வெளியான படம் சுறா. இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கிய படம் காவல்காரன். இப்படத்தின் பெயருக்கு சத்யாமூவிஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததால் காவல்காதல் என்று பெயர் மாற்றினார்கள்.
ஆனால் இந்தத் தலைப்பு விஜய்க்குத் திருப்தி தரவில்லையாம். இதையடுத்து இப்போது காவலன் என படத்தின் பெயரை மாற்றியுள்ளனர்.
காவலன் படம் விஜய்யின் 51வது படமாகும். மலையாளத்து சித்திக் இயக்கியுள்ளார். ஜோடியாக ஆசின் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்காக கேரளாவுக்கும் அதையடுத்து ஐரோப்பாவுக்கும் செல்லவுள்ளனராம். இதை முடித்து விட்டால் படம் முடிந்து விடுமாம்.
இதையடுத்து டிசம்பரில், படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.
இதேபோல மறுபக்கம் வேலாயுதம் படமும் வேகமாக வளர்ந்து வருகிறதாம்.
Ingen kommentarer:
Send en kommentar