onsdag den 30. juni 2010

சூப்பர் குட் பிலிம்ஸில் விஜய்


விஜய்யின் ஆரம்பகால வெற்றிப் படங்களில் பாதியை தயா‌ரித்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்‌ரி. சௌத்‌ரியும், விஜய்யும் சேர்ந்தால் சக்சஸ் என்று சொல்லும் அளவுக்கு வெற்றிக் கூட்டணி இது. பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, திருப்பாச்சி என்று அனைத்தும் ஹிட் படங்கள்.

தற்போது காவல்காரன் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதனைத் தொடர்ந்து ஆஸ்கர் பிலிம்ஸ் தயா‌ரிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் வேலாயுதம் படம் காத்திருக்கிறது.

இந்த இரு படங்களுக்குப் பிறகு தயாராகும் விஜய் படத்தை தாணு தயா‌ரிக்கிறார். பகலவன் என்ற அந்தப் படத்தை இயக்குவது சீமான்.

இந்த மூன்று படங்களுக்குப் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயா‌ரிப்பில் விஜய் நடிப்பதாக நம்பத்குந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. முதல்கட்ட பேச்சுவார்த்தை ஜெயமாக முடிந்ததாகவும் சொல்கிறார்கள்.

சௌத்‌ரி, விஜய் கூட்டணியின் வெற்றி தொடர்ந்தால் இன்டஸ்ட்‌ரிக்கு நல்லது.

torsdag den 24. juni 2010

மீண்டும் விஜய் - பேரரசு கூட்டணி


மலையாளத்தில் சித்திக் இயக்கி வெளிவந்த பாடிகார்டு படத்தின் ரீமேக்தான் காவல்காரன். இந்தப் படம் முடிந்ததும், ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க ராஜா இயக்கும் வேலாயுதம் படம் துவங்கும்.

ஜெனிலியா - ஹான்சிகா மோத்வானி இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க, சரண்யா மோகன் விஜய்க்குத் தங்கையாக வருகிறார். வெறும் ஆக் ஷன் படமாக மட்டும் இல்லாமல் சென்டிமெண்ட், காமெடி என எல்லா அம்சங்களும் இருக்கும்படி பார்த்துப் பார்த்து உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர்.

இது ஒருபுறமிருக்க, சிவகாசி, திருப்பாச்சி என விஜய்க்கு இரண்டு சூப்பர்ஹிட் படங்களைத் தந்த பேரரசுவும் கதைசொல்ல அணுகியபடியே இருக்கிறாராம். ஏற்கனவே இரண்டொரு படங்களில் கமிட்டாகியுள்ளதால் சற்றே பொறுக்கும்படி சொல்லியிருக்கிறாராம் விஜய்.

onsdag den 23. juni 2010

vijay 51st movie stil


kavalkkaran spot image





எதிர்பார்ப்பைக் கிளப்பும் பகலவன்


கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் இளைய தளபதி விஜய் அசத்திய சச்சினுக்குப் பின் மீண்டும் ஒரு முறை தாணு -விஜய் கூட்டணியில் பகலவன் வர இருப்பதை நாமறிவோம்.

தம்பிக்குப் பின் இயக்கத்துக்கு நீண்ட ஓய்வு விட்டிருந்த சீமான் மீண்டும் களமிறங்கத் தயாராகிவிட்டார். சீமான் பிரபாகரனைச் சந்தித்தபோது தம் மனதிலிருந்த இரண்டு கதையை அவரிடம் பகிர்ந்து கொண்டாராம்.

அவற்றில் ஒன்றுதான் பகலவனின் கதை. படப்பிடிப்பு தொடங்குமுன்னே ஏக எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது இந்தப் படம். இயக்குநர் ஜெகன்ஜி இயக்கத்தில் நடித்து வரும் சீமான் அந்தப் படம் முடிந்த கையோடு பகலவனைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

tirsdag den 22. juni 2010

விஜய் 37வது பிறந்த நாள்


நடிகர் விஜய் இன்று தனது 37வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி ஏராளமான ஏழை மாணவ மாணவியருக்கு கல்வி உதவிகளை வழங்கினார்.

டீக்கடையில் இரவில் வேலை செய்து கொண்டே பகலில் மாநகராட்சிப் பள்ளியில் படித்து 1200க்கு 1130 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பாண்டியராஜ் எனும் மாணவரைப் பற்றிக் கேள்விப்பட்ட விஜய், அவரை இன்று நேரில் வரவழைத்தார். அந்த மாணவர் என்ன படிக்க விரும்புகிறார் எனக்கேட்டு அதற்கான முழுச் செலவையும் ஏற்பதாக அறிவித்தார்.

மேலும் விஜய் உதவியுடன் கம்ப்யூட்டர் கல்வி படித்து தேர்ச்சி பெற்ற 37 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். உறுப்பு தானம் வழங்கிய 37 பேருக்கு சான்றிதழ்களும், 37 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கினார்.

இதே போல தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களைத் தத்தெடுத்துள்ள நடிகர் விஜய், அவர்களது கல்விக்கான அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று படிக்க வைக்கிறார். விஜய்யின் மேலாளரும் மக்கள் தொடர்பாளருமான பிடி செல்வகுமார் இப்பொறுப்பை நேரடியாகக் கவனித்து வருகிறார்.

மாவட்டம்தோறும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களையும் விஜய் ரசிகர் மன்றங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று விஜய் பிறந்த நாளையொட்டி காலை 9 மணிக்கு பாலவாக்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் விஜய் முன்னிலையில் ரசிகர்கள் நூறு பேர் ரத்த தானம் வழங்கினர்.

காலை 9.30 மணிக்கு திருவான்மியூர் தியாகராஜர் தியேட்டர் எதிரிலுள்ள முத்துலட்சுமி மருத்துவமனையில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தார்.

காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகே ஊள்ள நகராட்சி
மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தார்.

காலை 11 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள அவரது ஷோபா திருமண மண்டபத்தில் அனாதை இல்ல குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கினார். மேலும் தமிழகம் முழுவதும் இதுபோன்ற உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் இன்று நடந்து வருவதாக விஜய் தெரிவித்தார்.

பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தலைமை விஜய் நற்பணி இயக்க தலைவர் சி.ஜெயசீலன், துணைத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரவிராஜா, துணைச்செயலாளர் ஐ.சி.குமார், மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

birthday spl





mandag den 21. juni 2010

torsdag den 17. juni 2010

விஜய் 'தங்கச்சி'யானார் சரண்யா மோகன்!


ஜெயம் ராஜா இயக்கும் வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கை வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சரண்யா மோகன்.
இதுபற்றி சரண்யா கூறுகையில், "விஜய்க்கு தங்கையாக நடிப்பதில் பெருமைதான். எனது வேடம் சிறப்பாக உள்ளது. விஜய்யுடன் நடிக்கும் போது கிடைக்கும் புகழும் ரீச்சும் என்னவென்பது புரிகிறது. அதனால்தான் மறுபேச்சின்றி ஒப்புக் கொண்டேன்," என்றார்.

onsdag den 16. juni 2010

விஜய் பட ஒளிப்பதிவாளர் மாற்றம்


விஜய் சித்திக் இயக்கத்தில் காவல்காரன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கும் படம் வேலாயுதம். ஆஸ்கர் பிலிம்ஸ் தயா‌ரிக்க, ஜெயம் ராஜா இயக்குகிறார்.

இந்தப் படத்தில் இரு ஹீரோயின்கள். ஒருவர் ஹன்சிகா மோத்வானி. இன்னொருவர் சர்ச்சையில் சிக்கிய ஜெனிலியா. இவர்களுடன் சரண்யா மோகனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஜய் படத்தில் இத்தனை இளம் பெண் கதாபாத்திரங்கள் இடம் பெறுவது இதுவே முதல் முறை.

வேலாயுதத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்வார் என முதலில் கூறப்பட்டது. தற்போது அவருக்குப் பதில் ஹ‌ரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்‌ரியனை ஒப்பந்தம் செய்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

mandag den 14. juni 2010

விஜய்யுடன் இணைந்து சீமான்-தாணு


அரசியலில் கால் வைத்த பிறகு சீமானிடமிருந்து கலைப் படைப்பு எதுவும் வரவில்லை. அந்தக் குறையைத் தீர்க்க இப்போது பகலவன் என்ற படத்தை உருவாக்குகிறார்.

இந்தப் படத்தைத் தயாரிப்பவர், பிரமாண்டம் என்ற சொல்லுக்கு சினிமாவில் புதிய அர்த்தம் தந்த கலைப்புலி எஸ் தாணு.

விஜய் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் மற்றும் இதர டெக்னீஷியன்கள் குறித்து
இன்னும் ஓரிரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

இதுகுறித்து இயக்குநர் சீமான் கூறுகையில், "நானும் தம்பி விஜய்யும் இணைந்து புதிய படம் செய்வது உறுதியானதுதான். அண்ணன் தாணுவுக்காக இந்தப் படத்தை உருவாக்குகிறோம். தரத்தில் இரண்டு மடங்கு 'தம்பி'யாக இந்தப் படம் அமையும்..." என்றார்.

தயாரிப்பாளர் தாணு கூறுகையில், "சச்சினுக்குப் பிறகு தம்பி விஜய்யுடன் இணைந்து படம் செய்கிறேன். தம்பி சீமானைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அவருடைய இயக்கத்தில் படம் செய்வது பெருமையாக உள்ளது. படம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்", என்றார்.

mandag den 7. juni 2010

வேலாயுதம்


ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படம், நாகார்ஜூனா - சௌந்தர்யா நடித்த 'ஆஸாத்' என்ற பழைய தெலுங்குப் படத்தின் ரீமேக்.
ஆக்ஷன், காதல் கலந்த இந்தப் படத்தில், இருப்பவர்களிடம் பிடுங்கி இல்லாதவர்களுக்குத் தரும் நவீன ராபின்ஹூட்டாக நடிக்கிறாராம் விஜய்.

இந்தப் படத்துக்கான ஃபோட்டோ ஷூட் நேற்று சாலிகிராமத்தில் உள்ள ஸ்டுடியோவில் நடந்தது. படத்தின் நாயகி ஹன்ஸிகா மோத்வானி இதில் பங்கேற்றார்.

onsdag den 2. juni 2010

tirsdag den 1. juni 2010

ரஜினி படத்தில் விஜய்!

25 வருடங்களுக்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ரஜினி, அம்பிகா, நடிப்பில் வெளிவந்த படம், ‘நான் சிவப்பு மனிதன்’. அப்படத்தை ரீமேக் செய்து தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி. இதில் ரஜினி நடித்த வேடத்தில் விஜய் நடிக்கிறாராம். ‘தயாரிப்பு மட்டும் நான். டைரக்டர் முடிவாகவில்லை’ என எஸ்.ஏ.சி. தெரிவித்துள்ளார். இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ப, ‘நான் சிவப்பு மனிதன்’ கதையில் மாற்றங்கள் செய்யப்படுமாம்.