lørdag den 14. marts 2009
வேட்டைக்காரன் நூறு பேருடன் விஜய் ஆட்டம் !
ஏவி.எம்., நிறுவனம் சார்பில் எம்.பாலசுப்பிரமணியம், பி.குருநாத் மெய்யப்பன் ஆகியோர் இணைந்து பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் படம் வேட்டைக்காரன். இப்படத்தில் விஜய் - அனுஷ்கா நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள். படத்துக்கு கதை எழுதி இயக்குபவர் பி.பாபுசிவன். இவர் இயக்குனர் தரணியிடம் பல படங்களில் இணை, துணை இயக்குனராக பயிற்சி பெற்றவர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 9ம் தேதி தொடங்கியது. ராஜமுந்திரியில் நடந்து வரும் சூட்டிங்கில் விஜய் ஓப்பனிங் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் விஜய்யுடன் 100 நடன கலைஞர்கள் பங்கேற்று ஆடினார்கள். இதற்கு நடன இயக்குனர் ஷோபி நடனம் அமைத்தார். தொடர்ந்து அங்கு சூட்டிங் நடந்து வருகிறது.
Abonner på:
Kommentarer til indlægget (Atom)
Ingen kommentarer:
Send en kommentar