இப்படத்தில் விஜய்க்கு ஜோடி போடுபவர் அனுஷ்கா. ரெண்டு படத்திற்குப் பிறகு தமிழை விட்டு விட்டுப் போன அனுஷ்கா, விஜய் படத்தின் மூலம் திரும்பி வருகிறார். படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பவர் சலீம் கோஷ். ஸ்ரீஹரி, ஷாயாஜி ஷிண்டே, சத்யன் ஆகியோரும் படத்தில் உள்ளனர். இயக்குநர் தரணியின் உதவியாளறான பாபு சிவன் இயக்குகிறார். கோபிநாத் கேமராவைக் கையாளுகிறார். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் கெஸ்ட் ரோலில் வந்து போன சுக்கிரன் படத்தின் மூலம் இசையமைப்பாளரானவர் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது. சண்டைக் காட்சிகளுக்கு கனல் கண்ணன். மார்ச் 9ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பின்போது, விஜய்யும், ஜூனியர் கலைஞர்கள் 100 பேரும் பங்கேற்ற டைட்டில் பாடல் காட்சியை மிகப் பிரமாண்டமாக ராஜமுந்திரியில் வைத்து சுட்டுள்ளனர். படத்தில் மொத்தம் ஆறு பாடல்ளாம். இவற்றில் 3 பாடல் காட்சிகளை நியூசிலாந்தின் அழகிய லொகேஷன்களில் வைத்து சுடச் சுட சுடவுள்ளனர்.
Ingen kommentarer:
Send en kommentar