விஜய் நடிக்கும் புதிய படம் வேட்டைக்காரன். இது பழைய எம்.ஜி.ஆர். பட தலைப்பு. பாபு சிவன் இயக்குகிறார். இவர் தரணியிடம் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
விஜய் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடந்து வருகிறது.
இப்படத்தில் விஜய் புது கெட்டப்பில் தோன்றுகிறார். கல்லூரி மாணவர் போல் முடிகள் நெற்றியில் விழ மீசை லேசான தாடியுடன் இளமையாக காட்சியளிக்கிறார். காதில் கடுக்கனும் மின்னுகிறது.
ஏற்கனவே பத்ரி, யூத் படங் களில் இளமை தோற்றத்தில் வந்தார். பின்னர் விசேஷ கெட்டப்புகள் எதுவுமின்றி சாதாரணமாக நடித்தார். இப்போது வேட்டைக்காரன் படம் மூலம் பழைய கெட்டப் புக்கு மாறி இருக்கிறார்.
இப்படத்தை ஏ.வி.எம். பாலசுப்பிரமணியம், குருநாத், மெய்யப்பன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
Ingen kommentarer:
Send en kommentar