வேட்டைக்காரன் பாடல் காட்சியில் விஜய் தனது மகன் சஞ்சயை ஆட வைக்கிறார். நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து கசிந்திருக்கும் இந்த தகவல் விஜயை அறிந்தவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.தனது மகன், மகள் இருவரின் புகைப்படமும் பத்திரிகைகளில் வெளிவருவதை விரும்பாதவர் விஜய். ஒருமுறை விஜய் ரசிகர் மன்ற பத்திரிகையில் அவரது மகன் சஞ்சய் பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படம் வெளியானது. அவ்வளவுதான். கொந்தளித்துவிட்டார் விஜய். அவரது ரசிகர் மன்ற தலைவர் குறிப்பிட்ட பத்திரிகை அலுவலகத்துக்கு சென்று அந்த புகைப்படங்களை வாங்கிய பிறகே விஜயின் பிபி குறைந்தது. தனது குழந்தைகளின் புகைப்படமே பத்திரிகையில் வெளிவரக் கூடாது என்பதில் கறாராக இருந்தவர், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்த நேரம் தனது மகனை தோளில் சுமந்தபடி மைதானத்துக்கு வந்தது பலரின் புருவங்களை உயரச் செய்தது.இதோ அடுத்த அதிரடியாக தனது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தப் போகிறார். விஜய் ரசிகர்கள் போஸ்டரில் படம் போட இன்னொரு ஹீரோ கிடைத்திருக்கிறார். பட்டாசு வெடிக்க வேண்டியதுதான் பாக்கி.
Ingen kommentarer:
Send en kommentar